தோனியின் கீப்பிங் கிளவுசுக்கு பி.சி.சி.ஐ., சப்போர்ட்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 04:19 pm
bcci-supports-dhoni-on-his-keeping-glows

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வித்தியாசமான கிளவுஸ் அணிந்து ஆடினார். அவரது கீப்பிங் கிளவுசில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சின்னம் போன்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. 

தோனியின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அந்த கிளவுசை இனியும் அணி வேண்டாம் என அறிவுருத்தியது. இந்நிலையில், தோனியின் கிளவுசில் இடம் பெற்றிருப்பது ராணுவ முத்திரை அல்ல என விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது. 

இது குறித்து, பிசிசிஐ சார்பில், ஐசிசியிடம் கூறியிருப்பதாவது: ‛‛ஐசிசி விதிகளின் படி, கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கையில், மத, அரசியல், ராணுவ அடையாளங்களை அணிவது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை அறிவோம். தோனியின் கிளவுசில் இருந்த முத்திரை, மதம், அரசியல் சார்பற்றது என்பது அனைவருக்கும் தெரியும். 

அதே சமயம், இந்திய துணை ராணுவப்படையின் முத்திரையை ஒத்திருந்தாலும், அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை. வாசகத்துடன் இடம் பெற்றால் மட்டுமே அந்த முத்திரை ராணுவத்துடன் தொடர்புடையது. எனவே, தோனி தொடர்ந்து அந்த கிளவுசை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close