இலங்கை - பாக்., ஆட்டம் மழையால் தாமதம்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 04:29 pm
srilanka-pakistan-match-delayed-due-to-rain

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் பிரிஸ்டோல் மைதானத்தில் பலத்த மழை பெய்து வருவதால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்றைய ஆட்டம், பிரிஸ்டோலில் நடைெபறுகிறது. இன்றைய போட்டியில், இலங்கை - பாக்., அணிகள் மாேதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மதியம் முதலே, மைதானத்தில் மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் கூட தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இதுவரை போட்டி இன்னும் துவங்கவில்லை. 

மழை எப்போது விடும், நாம் எப்போது போட்டியை கண்டு ரசிப்போம் என, இரு அணி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close