‛மக்கள் கேப்டன்’ தோனிக்கு குவியும் ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 05:05 pm
raina-supports-dhoni-on-his-glows

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கீப்பிங் கிளவுசில் பலிதான் லோகோ பயன்படுத்திய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‛‛நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில், தோனியின் செயல் அமைந்துள்ளது. இதற்கெல்லாம் ஆட்சேபனம் தெரிவித்தால், போட்டி நடக்கும் மைதானத்தில் நமாஸ் செய்யும் வீரர்களை என்ன சொல்வது? 

அவர் சுய விளம்பரத்திற்காக இப்படி செய்யவில்லை. தோனி, ராணுவத்தை மிகவும் நேசிக்கிறார். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களை கௌரவிக்கவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். அவரின் செயலை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்’’ என, சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார். 

அவரைப் போலவே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவரும், மத்திய அரசின் கேல் ரத்னா விருது பெற்றவருமான சுசில் குமாரும், தோனிக்கு ஆதரவாகவே கருத்துப் பதிவிட்டுள்ளார். 

தோனியின் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரை போன்ற படத்தை அகற்றும் படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுருத்தியிருந்த நிலையில், பிசிசிஐ மட்டுமின்றி, சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டவர்களும் தோனிக்கு ஆதரவாக கருத்த தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close