மழையால் ரத்தானது இலங்கை - பாக்., கிரிக்கெட் போட்டி

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 08:40 pm
srilanka-vs-pakistan-world-cup-cricket-match-abandoned-due-to-rain

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மாேதவிருந்த நிலையில், மைதானத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்ததால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடப்பதாக இருந்தது. எனினும், போட்டி நடைபெறவிருந்த மைதானத்தில் இன்று மாலை வரை மழை பெய்ததால், போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது. 

இதனால், 50 ஓவர்கள் கொண்ட போட்டி, 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரவு 8:49 மணிக்கு துவங்குவதாக இருந்தது. எனினும், மைதானத்தில் ஈரம் காயாததால், இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால், இரு அணி ஆதரவாளர்கள், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close