இங்கிலாந்துடன் மாேதும் வங்கதேசம்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 08:58 pm
england-vs-bangladesh-tomorrow-match-prediction

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், நாளைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம். இதில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்ற வகையில், இதற்கு முந்தைய போட்டிகளில் தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய நேரப்படி, நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மாேதுகின்றன. கார்டிப் எனும் இடத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுடனான தங்கள் முதல் போட்டியில், வெற்றி பெற்ற வங்கதேசம், அதற்கு அடுத்ததாக நியூசிலாந்துடனான போட்டியில் போராடித்தான் தோல்வி அடைந்தது. இதன் மூலம், தாங்கள் ஒன்றும் கத்துக்குட்டிகள் இல்லை என்பதை அந்த அணி வீரர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

அதே போல், உலகின் நம்பர் ஒன் ரேங்கிங்கில் உள்ள இங்கிலாந்து அணி, இந்த முறை கோப்பை வெல்லவும் அதிக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரு அணிகள் மோதும் போட்டியிலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது. 

எனினும், கார்டிப்பில் நடைபெறும் இந்த போட்டிக்கு, இயற்கை எவ்வித பங்கமும் விளைவிக்காது. சாதாகமான சூழல் நிலவுவதால், போட்டி முழுவதும் நடைபெறும். மழை குறுக்கிட வாய்ப்பில்லை. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. 

டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது நல்லது. அதிகபட்சமாக, இந்த பிட்சில், 280 - 300 ரன்கள் வரை ஸ்கோர் செய்யலாம். போட்டி முழுவதும் சுவாரசியமாக இருந்தாலும், போட்டியின் முடிவு, இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடியவே வாய்ப்புள்ளது. 

ராமசுந்தரம் 

கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close