தோனியின் கிளவுஸ் விவகாரம் :  'ஜகா' வாங்கிய பிசிசிஐ!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 03:28 pm
coa-chief-vinod-rai-on-balidaan-insignia-on-wicket-keeper-ms-dhoni-s-gloves

இந்திய துணை ராணுவத்தின்  'பலிதான்' முத்திரையை போன்ற சின்னம் பதிக்கப்பட்ட கிளவுஸை அணிந்து, தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் விவகாரத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. மேலும், ஐசிசி விதிகளுக்கு எதிராக பிசிசிஐ ஒருபோதும் செயல்படாது என்றும் பிசிசிஐ-யின் நிர்வாக குழுத் தலைவர் வினோத் ராய் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுசில் துணை ராணுவத்தை குறிக்கும் 'பலிதான்' முத்திரை இடம்பெற்றிருந்தது.

இதற்கு ஐசிசி கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், "குறிப்பிட்ட மத, அரசியல், ராணுவ  அடையாளங்களை அணிந்து வீரர்கள் விளையாடுவது தான் தவறு. தோனி அணிந்துள்ள கிளவுசில், துணை ராணுவத்தை குறிக்கும் முத்திரையை போன்ற சின்னம்தான் இடம்பெற்றுள்ளதே தவிர, வாசகம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே, விக்கெட் கீப்பிங் செய்யும்போது தொடர்ந்து அந்த கிளவுஸை பயன்படுத்த தோனிக்கு அனுமதியளிக்க வேண்டும்" என்று பிசிசிஐ கோரியிருந்தது. இக்கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில் பிசிசிஐ இவ்வாறு அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close