இங்கிலாந்து அசத்தல் தொடக்கம்... 15 ஓவர்களில் 100 ரன்கள்...

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 04:29 pm
worldcupcricket2019-eng-vs-ban-england-reached-100-runs-in-just-15-overs


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான  ஜேசன் ராய், ஜானி பேரிஸ்டோவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இருவரின் பொறுப்பான, அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி, முதல் 15 ஓவர்களிலேயேவிக்கெட் இழப்பின்றி, 100 ரன்களை கடந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகள் அனைத்தும் அவர்கள் பராபட்சமின்றி அடித்து விளாசி வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை இனியும் வங்கதேச அணி வீழ்த்தவில்லையென்றால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 350 -400 ரன்கள் எடுக்கவும் வாய்ப்புள்ளது. இங்கிலாந்தின் வேகத்தை கட்டுப்படுத்துமா வங்கதேசம்?... பார்ப்போம்...

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close