6,6,6, அவுட்...

  கிரிதரன்   | Last Modified : 08 Jun, 2019 05:53 pm
worldcupcricket2019-eng-vs-ban-roy-hat-trick-sixer

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம், கார்டிஃப் நகரின் சோஃபியா கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆட்டத்தின் 35 ஆவது ஓவரை, வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேஹடி ஹசன் வீசினார். முதல் மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ராய், நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட முயன்றார். ஆனால் பந்து கேட்ச்சாக மாறவே ராய் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர், 121 பந்துகளில் 153 ரன்களை குவித்து, இங்கிலாந்து அணிக்கு வலுசேர்த்துள்ளார். இதில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close