போன வாரம் 334 ரன்... இந்த வாரம் 386 ஸ்கோர்...யப்பா... என்னா டீம்யா இது!

  கிரிதரன்   | Last Modified : 08 Jun, 2019 11:00 pm
england-386-6-vs-bangladesh-achieve-their-highest-ever-world-cup-total

வங்கதேச அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி இன்று எடுத்துள்ள 386 ரன்களே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோராகும்.

முன்னதாக, 2011 உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 338 ரன்களை எடுத்ததே, அந்த அணி உலகக்கோப்பை போட்டிகளில் அடித்துள்ள அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில்,பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாட்டிங்காமில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 334 எடுத்தது. இருப்பினும், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close