செஞ்சுரி அடிச்ச சந்தோஷத்துல இங்கிலாந்து வீரர் செஞ்ச காரியத்தை பாருங்க!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 10:57 pm
jason-roy-hit-field-umpire-after-century

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய், தான் சதம் அடித்த மகிழ்ச்சியை மைதானத்தில் கொண்டாடியபோது, எதிர்முனையில் நின்றிருந்த நடுவரை முட்டி மோதி கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் இன்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதியன. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 121 பந்துகளில் 153 ரன்கள் அடித்து அசத்தினார். ராய் 96 ரன்கள் எடுத்திருந்தபோது, பவுண்டரி அடித்து சதத்தை பதிவு செய்தார். அப்போது காமெடியான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

ராய் சதத்திற்காக பவுண்டரிக்கு விரட்டிய பந்தை பார்த்தபடி ஓடி வந்து, எதிரில் இருந்த நடுவரை முட்டி மோதி கீழே தள்ளினார். இதில், நடுவர் ஜோயல் வில்சன் நிலைக்குலைந்து போனார். ராயின் சதத்திற்காக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,பெவிலியனில் ரெடியாக காத்திருந்த மோர்கன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள், இக்காட்சியை பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close