வேர்ல்டுகப் கிரிக்கெட் : வெறிகொண்ட இரு வேங்கைகள் மோதும் நாள் இன்று!

  கிரிதரன்   | Last Modified : 08 Jun, 2019 10:33 pm
worldcupcricket2019-ind-vs-aus-match-preview

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி கொண்ட களிப்புடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா.... தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட தெம்புடன் இந்தியா.... என வெறிகொண்ட இரண்டு வேங்கைகள் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.

 அத்துடன், சமீப காலத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வெச்சு செஞ்சது... அதற்கு இந்தியாவுக்கு வந்தபோது பதிலடி கொடுத்தது... என இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை எனலாம்.

அதேசமயம், உலகக்கோப்பை போட்டிகளில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெயரை தக்கவைத்து கொள்வதற்காகவே வழக்கத்தைவிட சிறப்பாக செயல்பட்டு, வேர்ல்டுகப் மேட்ச்சுகளில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடும் வித்தையை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தெளிவாக கற்று வைத்துள்ளனர். 

எனவே, இன்றைய போட்டி இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த சவாலை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற, துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், ஆரம்ப ஓவர்களில் மிச்சல் ஸ்டாரக், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகப்பந்துக்கு இரையாகிவிடக் கூடாது என்பது மிக முக்கியம். 

அதேபோன்று, சீராக ரன்களை எடுப்பதில் விராட் கோலிக்கு ஆரம்பத்தில் உள்ள தடுமாற்றமும் தீர்க்கப்பட  வேண்டும். இந்த இரு குறைகளையும் சரிசெய்துவிட்டால்,இருக்கவே இருக்கிறது லோகேஷ் ராகுல், தல தோனி, ஹர்த்திக் பாண்டியா என பேட்டிங் படை.

பும்ரா, சாஹல், கேதர் ஜாதவ் என பெளலர்களும் தங்கள் பங்களிப்பை இந்தப் போட்டியிலும் சிறப்பாக அளிப்பார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். தேவையை பொறுத்து, இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக முகமது சமி களமிறக்கப்படலாம்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இரு தூண்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இருவரும் நிலைத்து, அதிரடியாக ஆடக்கூடியவர்கள். இவர்களின் விக்கெட்டுகள் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக வீழ்த்தப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்திய அணிக்கு நல்லது.

மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் கல்டர் நைல், ஆடம் ஜம்பா, கிளைன் மேக்ஸ்வெல் என தமது மிரட்டும் பௌலிங்கை படையை தான், பேட்டிங்கை விட ஆஸ்திரேலியா அதிகமாக நம்புள்ளது. ஆஸ்திரேலிய பௌலர்களை, இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஸ்மார்ட்டாக எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் இன்றைய போட்டியின் வெற்றி, தோல்வி அமைந்துள்ளது.

டாஸ் : நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், லண்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவ்விரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்துள்ள அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, இன்றைய போட்டியிலும், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம்.

பிட்ச் நிலவரம் :  லண்டன் ஓவல் மைதானம், பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருந்தாலும், சமீபகாலத்தில் இங்கு பௌலர்களின் கையும் ஓங்கத்தான் செய்கிறது. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி 320 ரன்கள் எடுத்தால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இந்தியாவா?.. ஆஸ்திரேலியாவா!... இன்று ஜெயிக்க போவது யாரென்று பார்ப்போம் வாங்க...

ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close