லண்டனில் ஜாலியா மேட்ச் பார்க்கும் மல்லையா!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 04:24 pm
vijay-mallya-in-london-oval-cricket-stadium

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக, தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் ஓவல் மைதானத்துக்கு தற்போது வந்துள்ளார்.

பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு தப்பித்து, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அவரை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, லண்டன் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், லண்டனில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை, விஜய் மல்லையா நேரில் கண்டுகளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close