சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: யுவராஜ்சிங் அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 05:40 pm
retirement-from-international-cricket-yuvraj-singh-s-announcement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் இதுவரை 304 ஒரு நாள் போட்டிகள் 40 டெஸ்ட் போட்டிகள், 58 .டி.20 போட்டிகள் என 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் சிங்,  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்..

மேலும், இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல்விளையாடியது எனது அதிர்ஷ்டம் எனவும், கிரிக்கெட் எனக்கு போராட கற்று கொடுத்ததாகவும் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி மறக்கமுடியாத ஒன்று என குறிப்பிட்ட அவர், பல போட்டிகள் எனது நினைவை விட்டு நீங்காதவை என தெரிவித்தார். 

வாழ்த்து : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் விவிஎஸ் லெட்சுமணன் உள்ளிட்டோர் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்காக யுவராஜ் சிங் ஆற்றியுள்ள பங்களிப்பையும், சகவீரர்கள் என்ற முறையில் களத்திலும், களத்துக்கு வெளியேயும் அவருடனான தங்களின் அனுபவத்தையும் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close