யுவ்ராஜ் சிங்... டாப் 5 ஆட்டங்கள்...

  கிரிதரன்   | Last Modified : 10 Jun, 2019 09:04 pm
top-five-matches-of-yuvraj-singh

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான யுவ்ராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

37 வயதில் தமது ஓய்வை அறிவித்துள்ள அவர், கடந்த 19 ஆண்டுகளாக, இந்தியாவுக்காக 304 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 2007 டி20 உலகக்கோப்பை போட்டிகள் என பல முக்கியமான போட்டிகளில் இந்திய  அணி வெற்றிபெற யுவ்ராஜ் சிங்  முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது ஆகச் சிறந்த ஐந்து ஆட்டங்கள் குறித்த ஒரு ப்ளாஸ்பேக்...

2000 - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (மினி வேர்ல்டு கப்) போட்டி... நைரோபியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 80 பந்துகளில் 84 ரன்களை குவித்து அசத்தியிருப்பார் யுவ்ராஜ் சிங். இது அவர் விளையாடிய முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

2002 -  நெட்வாஸ்ட் டிராபிக்கான இறுதி போட்டி. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற 326 ரன்கள் எடுத்ததாக வேண்டிய நிலையில், 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து இந்தியா தடுமாறி கொண்டிருந்த தருணம்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு முகமது கைஃப் உடன் ஜோடி சேர்ந்து, யுவ்ராஜ் சிங் எடுத்த 69 ரன்கள், அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தது. யுவ்ராஜ் சிங் -முகமது கைஃப் ஜோடி 106 பந்துகளில் 121 ரன்களை விளாசியது கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் நினைவுக்கூரப்படும்.

2007 -ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி... டர்பன் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில், 12 பந்துகளில் 50 ரன்களை விளாசி புதிய சாதனைப் படைத்தார் யுவ்ராஜ். டி20 போட்டிகளில் முதல்முறையாக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுதான் என்பதும், அந்த ஆட்டத்தின் 19 -ஆவது ஓவரில் யுவ்ராஜ், அடுத்தடுத்து ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டதும் கிரிக்கெட் உலகில் என்றென்றும் மறக்க முடியாத அற்புதமான தருணமாகும்.

2011 -உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி... ஆமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் மிக முக்கியமான தருணத்தில் யுவ்ராஜ் சிங் 57 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொள்ள வித்திட்டார்.

முதல் ஆல்-ரவுண்டர் : 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 300-க்கும் அதிகமான ரன்களை எடுத்ததுடன், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் யுவ்ராஜ் சிங் பெற்றுள்ளார். ஒரு உலகக்கோப்பை தொடரில், வேறெந்த ஆல் -ரவுண்டருக்கும் கிடைக்காத இந்தப் பெருமையை யுவ்ராஜ் சிங் பெற்றுள்ளார்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close