உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 03:01 pm
shikar-dhawan-out-of-india-team-world-cup-2019

இடது கை பெருவிரல் காயம் காரணமாக, உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இந்திய அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது. 

நேற்று முன்தினம் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சதமடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 109 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிரணி வீரர் வீசிய பந்து தவானின் இடது கை பெருவிரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இருந்தும், அவர் தொடர்ந்து விளையாடினார். ஆனால், இந்திய அணி பந்துவீச்சின் போது தவான் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். 

இதையடுத்து, இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால்  உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இந்திய அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close