இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் : அஸ்வின் நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 10:04 pm
the-indian-team-will-definitely-win-the-world-cup-ashwin

இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய வலிமையான அணியை வீழ்த்தி தெம்புடன் உள்ளது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக திரும்பியுள்ளது.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடர் குறித்து, சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அஸ்வின் இன்று அளித்த பேட்டியில், ‘2003 ஆஸ்திரேலிய அணியை போல, தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது. இதனால், இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகள் மீதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்’ என்றார்.

மேலும், "ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகியது பெரிய இழப்பு என்றாலும், ராகுல் அவர் இடத்தை பூர்த்தி செய்வார் என்றும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்" எனவும் அஸ்வின் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close