ஷிகர் தவான் சீக்கிரம் குணமடைந்து விளையாடுவார்: பிசிசிஐ நம்பிக்கை!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 11:48 pm
dhawan-will-stay-at-england-bcci

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இடது கை பெருவிரல், ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருப்பார் என்றும், விரைவில் குணமடைந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என, பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய வீரர் ஷிகர் தவானின் கையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாது. இது, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதிரடி ஆட்டக்காரரான தவான், தொடரிலிருந்து நிரந்தரமாக விலகினால், அது, இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதற்கிடையே, ஷிகர் தவான் குறித்து, பிசிசிஐ எனப்படும், இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதாவது: 
‛‛தவானின் இடது கை விரல்களில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், அவர் உடனடியாக தாயகம் திரும்பமாட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். தவான், தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருப்பார். அவர் விரைவில் குணமடைந்து, இந்திய அணிக்காக விளையாடுவார்’’ என, பிசிசிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தவான், தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருப்பார் என்ற தகவல், இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close