உலகக்கோப்பை: டாஸ் வென்றது பாகிஸ்தான்; ஆஸ்திரேலியா பேட்டிங்!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 03:31 pm
wcc-2019-australia-vs-pakistan

இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கியுள்ளனர்.

முன்னதாக உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 3 போட்டிகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், மூன்றாவதாக இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. 

அதேபோன்று பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி கண்ட போதும், அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கையுடனான மூன்றாவது ஆட்டம் மழையால் நடைபெறவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close