போச்சு...இன்னைக்கும் மேட்ச்  நடப்பதும் சந்தேகம் தான்!

  கிரிதரன்   | Last Modified : 13 Jun, 2019 03:00 pm
worldcupcricket-ind-vs-nz-match-delayed-due-to-rain

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மழை காரணமாக  தடைப்பட்டு வருவது தொடர்வதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா -வெஸ்ட் இண்டீஸ், இலங்கை -வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டிகள் மழை காரணமாக ஏற்கெனவே முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா  -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நாட்டிங்ஹாம் நகரின டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்த ஆட்டம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அங்கு மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close