இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ரத்தாக அதிக வாய்ப்பு?  

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 06:43 pm
india-pakistan-match-will-cancelled-due-to-rain

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மாேதவுள்ளன. ஆனால், அன்றைய தினம், போட்டி நடைபெறும் மைதானத்தில், மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால், போட்டி ரத்தாகிவிடுமாே என, ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

போட்டி நடைபெறும் மான்செஸ்டரில், இங்கிலாந்து நேரப்படி, காலை 9 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்யும் என, தனியார் ஆய்வு நிறுவனங்கள் வானிலை முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி, காலை 10 மணிக்கு ஆட்டம் துவங்கும் என்பதால், ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்படுவதோடு மட்டுமின்றி, இடையிடையே மழை பெய்தால், போட்டி ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

உலகக்கோப்பை தொடரில், இந்தியா - பாக்., ஆட்டத்தை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்கியிருப்பது மட்டுமின்றி, டிவி மூலம், இரு நாடுகளை சேர்ந்த பல கோடி ரசிகர்கள் இந்த போட்டிக்கான ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close