இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு: வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல் ஆட்டம்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 07:09 pm
worldcup-2019-westindies-212-all-out

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 213 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்துள்ளது.

சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில், லீவிஸ் களமிறங்கினார்கள். 

லீவிஸ் 2, கெயில் 36, ஹோப் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 13.2 ரன்களில் 55 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய நிலையில், பூரான், ஹெட்மேயர் அணியின் ஸ்கோரை சிறிது சிறிதாக உயர்த்தி வந்தனர். 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெட்மேயர் ரூட் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து, களமிறங்கிய ஹோல்டர் 9, ரஸ்ஸல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து ஒற்றை ஆளாக நின்று ஆடிவந்த பூரானும் 63 ரன்களுக்கும், ப்ரித்வெயிட் 14 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். 

பின்னர் வந்த வீரர்கள் 0,0,0, என டக் அவுட் ஆனார்கள், முடிவில் 44.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ், இங்கிங்லாந்து வெற்றி பெற 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

அதிகபட்சமாக பூரான் 63 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில், ஆர்ச்சர், வுட் தலா 3, ரூட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close