ரூட் அசத்தல் சதம்: இங்கிலாந்து அபார வெற்றி 

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 10:21 pm
england-won-the-root-of-the-century

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சௌதாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது.

213 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 33.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க  ஆட்டக்காரராக, முதல்முறையாக களமிறங்கிய ரூட் சதமடித்து   (93 பந்தில் ) அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.  நடப்பு உலகக்கோப்பையில் ரூட் அடிக்கும் 2-ஆவது சதம் இதுவாகும். 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரூட் 100, பேர்ஸ்டோவ் 45, வோக்ஸ் 40 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஆட்ட நாயகன் விருதை ரூட் பெற்றார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில், 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close