வெளுத்துக்கட்டும் இந்தியா... பாகிஸ்தான் கேப்டனுக்கு பிரதமர் இம்ரான்கான் அறிவுரை!

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jun, 2019 04:53 pm
fight-till-the-last-ball-is-what-imran-khan-told-his-team-before-match

கடைசி பந்து வரை போராடுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அறிவுரை கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இங்கிலாந்து, மான்செஸ்டர் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசி வருகிறது. இந்த அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்களை குவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸுக்கு டிவிட்டரில் அளித்துள்ள அறிவுரையில், " போட்டியில் திறமை 40 சதவீதமாக இருந்தால், மனவலிமை 60 சதவீதமாக இருக்க வேண்டும். அதனால் கடைசி பந்து வரை மனதைரியத்துடன் வெற்றிக்காக போராட வேண்டும்" என இம்ரான் கான் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close