இந்திய அணியின் ரன் மழைக்கு தடைப்போட்ட வான் மழை!

  கிரிதரன்   | Last Modified : 16 Jun, 2019 10:45 pm
ind-vs-pak-match-temporarily-stopped-due-to-rain-at-old-trafford-manchester

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும்  ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் நகரில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதென முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு இன்று காலை மழை பெய்யாததால், இந்தியா  -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் திட்டமிட்டப்படி காலை 10:30 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்கப்பட்டது.

இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ரன் மழையை பொழிந்து வந்த நிலையில், முதல் பாதி ஆட்டம் முடியும் நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 71 ரன்களுடனும், விஜய் சங்கர் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close