முதல் பந்திலேயே விக்கெட் : விஜய் சங்கர் அசத்தல்

  கிரிதரன்   | Last Modified : 16 Jun, 2019 08:41 pm
vijay-sankar-tooks-wicket-on-his-very-first-ball

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், மாஸ்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், 337 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இமாம் -உல் -ஹக் மற்றும் ஃபகர் ஜமாம் களமிறங்கினர். ஆட்டத்தின்  ஐந்தாவது ஓவரை, புவனேஸ்வர் குமார் வீசினார். நான்கு பந்துகளை வீசிய நிலையில், எதிர்பாராத விதமாக அவரால் மேற்கொண்டு பந்துவீச முடியவில்லை.

இதையடுத்து ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தை தமிழக வீரர் விஜய் சங்கர் வீசினார். அவர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம் -உல் -ஹக்கின் விக்கெட் எல்பிடபள்யு முறையில் வீழ்த்தி அசத்தினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close