இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்...அணியிலிருந்து வீரர் விலகல்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 09:47 pm
world-cup-cricket-shock-player-deviation-from-team

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார்.

மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில்  தற்போது நடைபெற்று வரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், பாகிஸ்தான் 337 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் இருந்து  இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்து வந்தார். தற்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பீல்டிங் செய்து வருகிறார். 

புவனேஸ்வர் குமார் 3.4 ஓவர் வீசியபோது காயம் ஏற்பட்டதால் விலகினார். இதனால் அந்த ஓவரை வீச அழைக்கப்பட்ட விஜய் சங்கர், முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close