பாகிஸ்தானை மீண்டும் பதம் பார்த்தது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2019 10:13 am
india-won-the-match-against-pakistan-in-worldcup-cricket

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் கைவிடப்படுமோ என்ற அச்சம்  ஏற்பட்டது. இது, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. 

இதையடுத்து, 50 ஓவர்களில் 337 ரன்கள் என்ற இலக்கு மாற்றப்பட்டு, 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

டக்வொர்த் லுாயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை எட்டமுடியாமல், பாக்., அணி தோல்வி அடைந்தது. 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாக்., அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம், உலக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி அனைத்து போட்டிகளிலும் வென்று 7 - 0 என்ற கணக்கில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close