புவனேஷ்வர் குமார் விளையாடமாட்டார்: அவருக்கு பதில் யார்?

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2019 03:11 pm
bhuvaneshwar-kumar-will-not-play-he-who-has-the-answer

தசைபிடிப்பு காரணமாக உலகக்கோப்பை தொடரில் அடுத்த 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. 3.4 ஓவர் வீசியபோது காயம் ஏற்பட்டதால் புவனேஸ்வர் குமார் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், காயம் காரணமாக அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் காயம் காரணமாக தவான் விலகிய நிலையில், தற்போது மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close