தோனி மகள்  -  ஃபண்ட் கூட்டணி அடிக்கும் லூட்டியை பாருங்க...

  கிரிதரன்   | Last Modified : 17 Jun, 2019 09:38 pm
rishabh-pant-keeps-ziva-dhoni-entertained-during-india-vs-pakistan-clash-in-manchester

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான  11 பேர் கொண்ட இந்திய அணியில், இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் ஃபண்ட் இடம் பெறவில்லை. எனினும், மாற்று வீரர்கள் 5 பேரில் ஒருவராக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், மாஸ்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  "தல" தோனி மைதானத்தில் பிசியாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்க, அவரின் மகள் ஷிவாவும், ரிஷப் ஃபண்ட்டும், கேலரியில் ஜாலியாக அமர்ந்து, லூட்டி அடித்து கொண்டிருந்தனர். குழந்தை ஷிவாவின் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

"சக வீரர்கள் களத்தில் கலக்கி கொண்டிருக்க, நானும், ஷிவாவும் கேலரியிலிருந்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தோம்" என்ற விளக்கத்துடன்,  தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஃபண்ட்  வெளியிட்டுள்ள  வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

A post shared by Rishabh Pant (@rishabpant) on

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close