இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி செய்தி.... உலகக்கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்...

  கிரிதரன்   | Last Modified : 19 Jun, 2019 06:19 pm
worldcupcricket-shikhar-dhawan-ruled-out-rishabh-pant-comes-in-as-replacement

இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, ரிஷப் ஃபண்டை அணியில் சேர்க்க, ஐசிசி -யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜூன்  9 -ஆம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பௌன்ஸ்சர் பந்தை அடிக்க முற்பட்டபோது, ஷிகர் தவானின் இடது கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

பரிசோதனையில் அவரது இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த எலும்பு முறிவு குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகுமெனவும், அதுவரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசி கொண்டிருந்தபோதே, தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தையடுத்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இந்த நிலையில், ஷிகர் தவானும் போட்டியிலிருந்து விலகியுள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close