தென்னாப்பிரிக்கா இன்னைக்காவது தேறுமான்னு பார்ப்போம்... நியூசிலாந்துக்கு 242 டார்கெட்!

  கிரிதரன்   | Last Modified : 19 Jun, 2019 09:00 pm
worldcupcricket-south-africa-fixed-242-target-for-newzealand

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக, தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம், எட்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்பன் கேன் வில்லியம்ஸ், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஆம்லா களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 9 ரன்களாக இருந்தபோது, டிரன்ட் போல்ட்  வீசிய பந்தில் கிளின் போல்ட்டாகி, டி காக் வெளியேறினார்.

இதையடுத்து, ஆம்லாவுடன், கேப்டன் டூப்ளஸிஸ் ஜோடி சேர அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 49 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்களை எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின்  வேன் டெட் துசன் 67 ரன்களும், அசிம் ஆம்லா அதிகபட்சமாக 55 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் லாக்கி ஃபெர்புசன் 59 ரன்கள்  கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 242 ரன்கள் வெற்றி இலக்குடன், நியூசிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close