ஹாட்ரிக் விக்கெட் ... அதுவும் ஆட்டத்தின் கடைசி ஓவரில்... அசத்திய சமி !

  கிரிதரன்   | Last Modified : 23 Jun, 2019 04:18 pm
worldcupcricket-mohammed-shami-got-hat-trick-wickets-against-afghanistan

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூட, வங்கதேச அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. அதிலும் முகமது நபி 48 ரன்கள் அடித்து தூண் போல் நின்றிருந்தார்.

அவர் நேற்று இருந்த ஃபாமுக்கு இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர்கூட அடித்து மேட்ச்சை முடித்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இத்தகைய சூழலில், மிகவும் முக்கியமான அந்த கடைசி ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வீசினார்.

6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், சமி வீசிய முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டுகிறார் முகமது நபி. இப்போது 5 பந்துகளில் 12  ரன்கள் அடித்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிடும்.  இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.

கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை வீசினார் சமி. அதில் ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அடித்தால் பௌண்டரி அல்லது சிக்ஸர் தான் என்ற முடிவுடன் இருந்த நபி, அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார்.

ஓவரின் மூன்றாவது பந்தை , தான் நினைத்தப்படி லாங் -ஆஃப் திசையில் பௌண்டரியை நோக்கி பறக்கவிட்டார் நபி. ஆனால், இந்தியாவின் அதிர்ஷ்டமோ, ஆப்கானிஸ்தானின் துரதிருஷ்டமோ... காற்றில் மிதந்து வந்த பந்தை, ஹர்த்திக் பாண்டியா ஓடி வந்து லபக்கென பிடிக்கவே, 52 ரன்களில், ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார் முகமது நபி.

அடுத்து களமிறங்கிய ஆலாமை,  தான் வீசிய அடுத்த பந்திலேயே க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார் சமி. இதையடுத்து கடைசி விக்கெட்டுக்கு  களமிறங்கினார் முஸ்புர் ரஹ்மான்.  வங்கதேசத்துக்கு 2 பந்துகளில் இன்னும் 12 ரன்கள் தேவை. ஏற்கெனவே இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சமிக்கு,  ஹாட்ரிக் வாய்ப்பு.

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை  ஸ்டெம்பை குறிவைத்து, யார்க்கராக சமி வீச, அது லெக் ஸ்டெம்பை  பதம் பார்க்கிறது. அவ்வளவு தான் ஆப்கானிஸ்தானின் கதை ஒருவழியாக முடிவுக்கு வந்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றியை ருசித்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அடுத்தடுத்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் சாதனைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர் பெருமையை முகமது சமி நேற்று பெற்றார். 

இதற்கு முன்னர், வேர்ல்டுகப் போட்டிகளிலேயே முதல்முறையாக, இந்திய அணியின் சேத்தன் சர்மா, 1987 உலகக்கோப்பை போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close