அடிப்பட்ட இரு வேங்கைகளில் இன்று வெல்லப் போவது யாரு?

  கிரிதரன்   | Last Modified : 23 Jun, 2019 06:02 pm
wcc-pak-vs-sa-match-preview

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஆட்டங்களில் பெரும்பாலானவற்றில் தோல்வியையே தழுவியதன் விளைவாக, தலா மூன்று புள்ளிகளுடன், பட்டியலில் தென்னாப்பிரிக்காவும், பாகிஸ்தானும் முறையே 8 மற்றும் 9 -ஆம் இடத்தில் உள்ளன.

இத்தொடரில் அடிப்பட்ட வேங்கைகளான இவ்விரு அணிகளும், லண்டன் லாட்ஸ் மைதானத்தில் தற்போது மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் யார் வென்றாலும், தோற்றாலும் அது இவ்விரு அணிகளில் ஏதேனும் ஒன்றை அரையிறுதி சுற்றுக்கு அழைத்து செல்ல நல்ல வாய்ப்பாக இருக்குமா என இப்போதைக்கு சொல்ல முடியாது.

ஆனால், இவ்விரு அணிகளும், ஒவ்வொரு காலக்கட்டத்தில், கிரிக்கெட் உலகில் ஆக சிறந்த அணிகளாக திகழ்ந்தவை. இதற்காகவேயாவது ரவுண்ட் ராபின் சுற்றில் இன்றைய போட்டியுடன் சேர்த்து, தமக்கு மீதமுள்ள  3 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவும், தன் வசம் மீதமுள்ள 4 போட்டிகளிலும் பாகிஸ்தானும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும்.

 பாகிஸ்தான் அணியை பொருத்தவரை டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை ஓகே தான்.  ஆனால், பௌலிங் தான், தென்னாப்பிரிக்காவை ஒப்பிட்டும்போது வீக்காக உள்ளது. இதற்கு நேர்மாறாக, தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. பௌலிங் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை என்பது மட்டுமே அந்த அணிக்கு சற்று ஆறுதலாக விஷயம்.

இரு அணிகளின் இத்தைய பலம், பலவீனங்களை வைத்து ஆராயும்போதும், லண்டன் லாட்ஸ் மைதானம்  ரன்  குவிப்புக்கு ஏற்ற பிட்ச் என்பதாலும், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதே சிறப்பான முடிவாக இருக்கும். அதன்படியே, டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ரன் குவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. மேட்ச்சை தொடர்ந்து பார்த்து என்ஜாய் பண்ணுங்க...

வி.ராமசுந்தரம்,

கிரிக்கெட் விமர்சகர், தொழிலதிபர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close