இம்ரான் கான் படத்துக்கு பதிலாக சச்சின் படம்.... பாக். பிரதமரின் உதவியாளரை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

  கிரிதரன்   | Last Modified : 23 Jun, 2019 10:53 pm
imran-khan-s-assistant-gets-brutally-trolled-after-putting-sachin-tendulkar-s-image-instead-of-pakistan-pm

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளராக இருப்பவர் நயீம் உல் ஹக். இவர், பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், இம்சமாம் -உல் -ஹக் உள்ளிட்டோரின் குழந்தைப் பருவ புகைப்படங்களை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்போது தவறுதலாக, "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 1969 -இல்" என்ற படவிளக்கத்துடன், அவரது புகைப்படத்துக்கு பதிலாக, சச்சின் டெண்டுல்கரின் குழந்தைப் பருவ படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டதும் சிரிப்பை அடக்க முடியாத நெட்டிசன்கள், தங்களது பாணியில் நையாண்டியான படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில சாம்பிள்கள் :
சர் டொனால்ட் பிராட்மேன், ஆசிஷ் டெஸ்ட் தொடர் போட்டிக்காக, 1930 -இல் லண்டன் ஓவல் மைதானத்தில் களமிறங்கியபோது என்ற கேப்ஷனுடன், பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.


இதேபோன்று, "இம்ரான் கான் 1992 -இல்" என்ற படவிளக்கத்துக்கு கீழே, தோனியின் இளமை கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

"சாகித் அஃப்ரிடி 2050" என்ற கேப்ஷனுடன், கொழு கொழு சிறுவனின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் "சஃப்ராஸ் 1987 -இல்" என்ற படவிளக்கத்துக்கு கீழே, கைக்குழந்தை ஒன்று கொட்டாவி விட்டப்படி உறங்கிக் கொண்டிருக்கும் ஃபோட்டோ வெளியிடப்பட்டுள்ளது.


நெட்டிசன்கள் இப்படி மரண கலாய் கலாய்த்த பின்பும், நயீம்  உல் ஹக் , தமது தவறான பதிவை  ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட். இப்பதிவு இதுவரை 8,100 லைக்குகளை பெற்றுள்ளதுடன், 1,000 முறை ரீட்விட்டும் செய்யப்பட்டுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close