தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்டு ஆறுதல் வெற்றியடைந்த பாகிஸ்தான்!

  கிரிதரன்   | Last Modified : 24 Jun, 2019 09:17 am
wcc-pakistan-beats-southafrica-by-49-runs

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,, பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியடைந்தது,

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். லாட்ஸ் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமான பிட்ச் என்பதால், முதலில் பேட்டிங் செய்தால் அதிக ரன்களை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் சர்ஃப்ராஸ் அகமது இந்த முடிவை எடுத்தார்.

தங்கள் அணி கேப்டனின் நம்பிக்கை பொய்ப்பித்து போகாதபடி, பாகிஸ்தானின் டாப்-ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நேற்று பட்டையை கிளப்பினர். தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் பந்துவீச்சை அவர்கள் ஒரு கை பார்த்ததன் பயனாக, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது.அதிகபட்சமாக, ஹரீஸ் சோகில் 89 ரன்களும், பாபர் அசம் 69 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுன்கி நெகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

309 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை அடைய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கடுமையாக போராடதான் செய்தனர். இருப்பினும், சீரான் இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு தென்னாப்பிரி்க்கா 259 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக, தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டூப்ளஸிஸ் 63 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 47 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் ரியாஸ், சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் ஹரீஸ் சோகில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானுடனான போட்டியிலும் தோல்வியை தழுவியதன் காரணமாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு மொத்தமாய் பறிபோய் உள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close