இந்தியா Vs பாகிஸ்தான் மாதிரி அனல்பறக்கும் இன்னொரு மேட்ச்... இங்கிலாந்துக்கு ஆப்பு வைக்குமா ஆஸ்திரேலியா?!

  கிரிதரன்   | Last Modified : 25 Jun, 2019 04:28 pm
worldcupcricket2019-today-match-eng-vs-aus

இங்கிலாந்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாகவும், ஒன் - சைடு கேமாக இருந்ததாலும், ஆரம்பத்தில் மந்தமாகவே நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது இப்போட்டிகளில் விறுவிறுப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விறுவிறுப்பை மேலும் கூட்டும் விதத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது ஆட்டத்தில் எப்படி அனல்பறக்குமோ, அதற்கு சற்றும் குறைவில்லாதபடியான மேட்ச் தற்போது நடைபெற்று வருகிறது. ல்ண்டன் லாட்ஸ் மைதானத்தில், நடைபெற்று வரும் இப்போட்டியில், பரம எதிரிகளான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையிலும், இந்த முறை கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணியாகவும் இங்கிலாந்து கருதப்பட்டு வருகிறது. ஆனால், ரவுண்ட் ராபின் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்றதன் விளைவாக, புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலும் இங்கிலாந்து வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், வேல்ர்டுகப்பில் பொதுவாகவே எந்த அணியிடமும் அவ்வளவு எளிதில் தோற்காத ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தமது பரம எதிரியான இங்கிலாந்திடம் தோற்கவா செய்யும்? புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள அந்த அணி. முதலிடத்தை பிடித்து கெத்து காட்ட வேண்டும் என்பதற்காகவாவது இன்றும் வெற்றிபெற கடுமையாக போராடும்.

லாட்ஸ் மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற பிட்ச் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யதான் விரும்பும். ஆனால், இங்கிலாந்து அணி டாஸ் வெல்லும் பட்சத்தில், முதலில் பௌலிங்கை தேர்வு செய்வது உத்தமம். பேட்டிங்கில் வலுவான இரு அணிகள் மோதும் போட்டி என்பதால், யார் முதலில் பேட்டிங் செய்தாலும், 330 ரன்களுக்கு குறையாமல் ஸ்கோர் செய்யலாம். ஒப்பிட்டளவில் ஆஸ்திரேலியா தான் இன்று வெற்றி வாய்ப்பு அதிகம். தொடர்ந்து மேட்ச் பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே...

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close