286 ரன்கள் வெற்றி இலக்கு: இங்கிலாந்து வெற்றி பெறுமா?

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 07:13 pm
australia-286-runs-target-england

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, ஆஸி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினார்கள். முதலில் இருவரும் நிதனமாக ஆடியதால் முதல் 10 ஓவர்களுக்கு 44 ரன்கள் எடுக்கப்பட்டு, அடுத்து 20 ஓவர்களில் 100 ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். 

வார்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மொயின் அலி பந்துவீச்சில் அவுட்டானார். வார்னர், பின்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, களமிறங்கிய கவாஜா 23 ரன்களில் ஆட்டமிழக்க, இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பின்ச் 115 பந்தில் நடப்பு உலகக்கோப்பையில் 2-வது சதத்தை பதிவு செய்தார். அடுத்த பந்திலேயே அவுட் ஆகியும் வெளியேறினார். தங்கள் பங்கிற்கு ஸ்மித் 38, கேரி 38 ரன்கள் எடுத்தனர். 

40 ஓவர்களுக்குள் 200 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கையில், கடைசி நேரத்தில் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சால் 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அதிகபட்சமாக பின்ச் 100, வார்னர் 53 ரன்கள் எடுத்தனர். வோக்ஸ் 2, ஆர்ச்சர், மார்க் வுட், ஸ்டோக்ஸ், மொயின் அலி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close