500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் !

  கிரிதரன்   | Last Modified : 25 Jun, 2019 10:00 pm
david-warner-becomes-1st-batsman-to-reach-500-run-mark-in-world-cup-2019

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை கடந்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியின் 22 -ஆவது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்தார். இன்றைய ஆட்டத்தில் வார்னர்  53 ரன்கள் (61 பந்துகள்) எடுத்து அவுட் ஆனார்.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செம ஃபாமில் இருக்கும் வார்னர், மொத்தம்  ஆறே போட்டிகளில் 500 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் (1996, 2003),  மத்யூ ஹைடன் (2007),  திலகரத்னே தில்சான் (2011),  மார்டீன் குப்டீல் (2015) ஆகியோர், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close