இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

  விசேஷா   | Last Modified : 25 Jun, 2019 10:35 pm
worlcup-cricket-australia-won-the-match-against-england

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி வீழ்ந்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. 286 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 

எனினும் அந்த அணி வீரர்கள் கடைசி வரை தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினர். எனினும், அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல்,221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்த உலகக்கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close