நியூசிலாந்து கலக்கல் பேட்டிங்... பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் டார்கெட் !

  கிரிதரன்   | Last Modified : 27 Jun, 2019 11:07 am
wcc-newzealand-fix-238-runs-target-for-pakistan

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில், எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினாலும், கேட்பன் கேன் வில்லியம்சன் மட்டும் நிதானமாக ஆடி கொண்டிருந்தார். இருப்பினும் அவரும் 41 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டாகி வெளியேறவே, 26 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 83 ரன்களை மட்டும் எடுத்து நியூசிலாந்து தடுமாறி கொண்டிருந்தது.

அப்போது களத்தில் அதிரடியாக ஆடி கொண்டிருந்த ஜிம்மி நேசஹம் உடன், கிராண்ட் ஹோமி ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர, ஆட்டம் களைகட்டியது. இருவரின் பாட்னர்ஷிப்பை பிரிக்க, பாகிஸ்தான் பௌலர்கள் படாதபாடு பட்டனர். 

இருப்பினும் இந்த ஜோடியை 48 -ஆவது ஓவர் வரை பிரிக்க முடியவில்லை. இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜிம்மி நேசஹம் 97 ரன்களும் (நாட் -அவுட்), கிராண்ட்ஹோமி 64 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹேன் அஃப்ரிடி 10 ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணி கடைசி பத்து ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 85 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close