கோலி... 20,000 ... ரன் மெஷின் சச்சினின் சாதனையை முறியடித்தார்!

  கிரிதரன்   | Last Modified : 27 Jun, 2019 05:21 pm
cricket-virat-kohli-surpasses-20-000-runs-breaks-sachin-and-lara-record

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20, 000 ரன்களை கடந்துள்ள வீரர் என்ற சாதனையை, இந்திய அணி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

வெண்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, மான்செஸ்டரில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோலி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இன்றைய ஆட்டத்தின் 25 -ஆவது ஓவரில் 37 ரன்களை எடுத்தபோது கோலி மாபெரும் இச்சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன் மூலம், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

அவர்கள் இருவரும் 453 போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 417 போட்டிகளிலேயே இச்சாதனை மைக்கல்லை கடந்துள்ளார். கோலி இதுவரை மொத்தம் விளையாடியுள்ள 417 போட்டிகளில் 131 டெஸ்ட் ஆட்டங்கள், 224 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 63 டி -20  போட்டிகள் அடங்கும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close