சாஸ்டாங்கமாய் மைதானத்தில் உறங்கிய வீரர்கள், அம்பயர்கள்.... உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம் !

  கிரிதரன்   | Last Modified : 28 Jun, 2019 09:55 pm
south-africa-versus-sri-lanka-halted-for-interim-period-due-to-swarm-of-bees-passing-through

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடரில், இங்கிலாந்தின்  செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. இதில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின்  48 -ஆவது ஓவரில், தென்னாப்பிரிக்க அணியின் கிறிஸ் மோரீஸ் பந்துவீசிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக,  மைதானத்துக்குள் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக நுழைந்தன. இதனால் சற்று அதிர்ச்சியடைந்த வீரர்கள் மற்றும் அம்பயர்கள், தேனீக்கள் தங்களை கொட்டாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக மைதானத்தில் சில நிமிடங்கள் சாஸ்டாங்மாய் உறங்குவது போல் நடித்தனர். மைதானம் முழுவதும் ரீங்காரத்துடன் வட்டமிட்டு கொண்டிருந்த தேனீக்கள் வெளியேறியதும், ஆட்டம் தொடர்ந்தது.

இதேபோன்று, 2017 -ஆம் ஆண்டு, இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள்  போட்டியின்போதும், தேனீக்களின் குறுக்கீ்ட்டால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close