பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்!

  முத்துமாரி   | Last Modified : 30 Jun, 2019 09:26 am
head-of-cricket-rahul-dravid-to-take-charge-at-nca-on-july-1

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை ஜூலை 1ம் தேதி அவர் தலைவராக பொறுப்பேற்கிறார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை இந்த தலைவர் பொறுப்பை ஏற்கிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக ராகுல் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கான பயிற்சி அளிக்கும் பொறுப்பை தாற்காலிகமாக அதன் துணை பயிற்சியாளர்கள் கவனித்துக்கொள்வர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close