உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் விஜய் சங்கர்!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 02:49 pm
vijayshankar-ruled-out-of-worldcup2019-with-toe-injury

காலில் ஏற்பட்ட காயம்  காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார். 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் வெளியேற, தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

முதல்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான தமது முதல் போட்டியில், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதனை படைத்திருந்தார். 

இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக இளம்வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். விஜய் சங்கர் ஏன் இல்லை என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம்  காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் ஷங்கர் விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது . 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close