விராட் கோலி...சாதனை மேல் சாதனை !

  கிரிதரன்   | Last Modified : 01 Jul, 2019 04:37 pm
wcc2019-virat-kohli-breaks-dravid-record-also

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி -20 கிரிக்கெட் போட்டிகளில் 413 ஆட்டங்களிலேயே 20,000 ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவின் சாதனைகளை முறியடித்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார்.

அத்துடன், அந்தப் போட்டியில் அவர் அரை சதம் அடித்ததன் மூலம், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் நான்கு அரை சதம் அடைத்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை கோலி படைந்தார். முன்னதாக, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த ஆட்டங்களில் கோலி அரைசதம் அடித்திருந்தார்.

இதன் மூலம், 1992 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் மூன்று அரைசதம் அடித்திருந்த சாதனையை கோலி முறியடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக, பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் கோலி தமது சாதனைப் பயணத்தை தொடர்ந்தார். நேற்றைய ஆட்டத்திலும் அவர் அரைசதம் அடித்ததன் மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 5 ஆட்டங்களில்,  ஐந்து அரைசதம் அடித்துள்ள முதல் கேப்டன் என்ற மற்றொரு சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார். அங்கு இதுவரை 28 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து மொத்தம் 1,321 ரன்களை குவித்துள்ளார்.

அத்துடன், ஒருநாள் சர்வதேச போட்டிகளில், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை எடுத்துள்ள இந்திய வீரர் சாதனையையும் கோலி நேற்று படைத்தார்.  இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ராகுல் டிராவிட், இங்கிலாந்து மண்ணில் 1,238 ரன்கள் அடித்துள்ளதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close