வேர்ல்டுகப் : செமி ஃபைனலுக்கு மல்லுக்கட்டும் அணிகள்!

  கிரிதரன்   | Last Modified : 01 Jul, 2019 06:05 pm
wcc2019-which-teams-will-qualified-to-semi-final

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்தில், அணிகளின் ஃபார்ம், தொடக்க ஆட்டங்களில் அவை பெற்ற வெற்றி, தோல்விகள் போன்றவற்றை வைத்து பார்த்தபோது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்கு (செமி ஃபைனல்) முன்னேறும் என்பதே, கிரிக்கெட் உலகின் கணிப்பாக இருந்து வந்தது.

ஆனால், நடுவில் புகுந்து ஆட்டத்தை கலைப்பதை போல, இங்கிலாந்தை இலங்கை அணியும், நியூசிலாந்தை பாகிஸ்தானும் எதிர்பாராத விதமாக வெற்றி கொண்டதையடுத்து, புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இது போதாதென்று, ஆஸ்திரேலியாவை எளிதாக ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை நியூசிலாந்து கோட்டைவிட்டதும், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரைக்கும் தோல்வியே அடையாத அணி என்று கெத்து காட்டி வந்த இந்தியாவும், இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியதும் புள்ளிகள் பட்டியலில் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மட்டும்தான் செமி ஃபைனலுக்கு சேஃபாக தகுதிபெறும் அணியாக உள்ளது. 
அடுத்து, 11 புள்ளிகளுடன் ரன் ரேட்டின்படி இரண்டாமிடத்தில் உள்ள இந்திய அணி, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்,  எவ்வித சிக்கலும் இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

ஆஸ்திரேலியா, இந்தியாவை தவிர்த்து, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்து செமி ஃபைனலில் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கேதேசம், இலங்கை என ஐந்து அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. இதில், ரவுண்ட் -ராபின் சுற்றில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் இருக்காது எனலாம். மாறாக, இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், 12 புள்ளிகளுடன் அந்த அணி செமி ஃபைனலுக்கு செல்லக் கூடும்.

அப்போது, அரையிறுதிக்கு செல்லும் அந்த நான்காவது அணி யார் என்பதில், 11 புள்ளிகளுடன் இருக்கும் நியூசிலாந்துக்கும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பலத்த மல்லுக்கட்டு நடக்கும். தற்போது 9 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியுடனான தமது கடைசி போட்டியில், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் அதிரடியாக ஜெயித்தால், நியூசிலாந்தை வெளியேற்றிவிட்டு, அரையிறுதி சுற்றுக்குள் நுழைய வாய்ப்புண்டு.

மாறாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரு போட்டிகளிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் அதிசயம் நிகழ்ந்தால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஆப்பு வைத்துவிட்டு, அந்த அணி செமி ஃபைனலுக்குள் நுழையலாம். இதேபோன்று, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரு ஆட்டங்களில் மிக அதிக ரன் ரேட்கள் வித்தியாசத்தில் இலங்கை ஜெயிக்கும் அதிசயம் நடந்தால், இங்கிலாந்துக்கு அல்வா கொடுத்துவிட்டு, இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான சான்ஸ் உண்டு.

யார் கண்டது..! ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். எது எப்படியோ, நமக்கு இந்தியா வேல்ர்டு கப்பை ஜெயித்தால் போதும். பார்ப்போம்... என்ன நடக்குதுன்னு....

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close