339 ரன்கள் டார்கெட்: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய இலங்கை

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 07:30 pm
worldcup-westindies-need-339-runs

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கருணாரத்னே, குஷால் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. கருணாரத்னே 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அவிஷ்கா பெர்னாண்டோ வந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த குஷால் பெரேரா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார். 

இதையடுத்து களமிறங்கிய குஷால் மெண்டீஸ், அவிஷ்கா பெர்னாண்டோ நிலையாக நின்று ஆடினர். அணியின் ஸ்கோரும் உயர்ந்து. இந்த நிலையில், குஷால் மெண்டீஸ் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், அடுத்து வந்த மேத்யூசும் 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால், அணி 35 ஓவர்களுக்குள் 200 ரன்களை தொட்டுவிட்டது.

அடுத்து வந்த திரிமண்ணே, அவிஷ்கா பெர்னாண்டோவுடன் கூட்டு சேர்ந்து, இருவரும்  ரன்களை மளமளவென சேர்த்தனர். இதனால், 45 ஓவர்களில் 300 ரன்களை தொட்டது. அடுத்த ஓவரிலேயே , அவிஷ்கா பெர்னாண்டோ ஒருநாள் போட்டியில் தனது முதல் (100 பந்தில்) சதத்தை பதிவு செய்தார். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை வீரர் அடிக்கும் முதல் சதமும் கூட இது.

இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 104 (சிக்ஸர் 2, ஃபோர்ஸ் 9), குஷால் பெரேரா 64, திரிமண்ணே 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 2, ஆலென், தாமஸ், காட்ரெல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close