இப்போகூட ராயுடுவுக்கு சான்ஸ் தர்றலன்னா எப்படி ப்ரோ?... கோலியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்!

  கிரிதரன்   | Last Modified : 02 Jul, 2019 03:59 pm
aakash-chopra-raises-a-valid-point-over-replacements-announced-for-shikhar-dhawan-vijay-shankar

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின்போது கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியின் ஆல் -ரவுண்டரும், தமிழகத்தைச் சேர்ந்த வீரருமான விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அனுபவமுள்ள மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அனுபவம் மிக்க அம்பதி ராயுடுவை, உலகக்கோப்பை போட்டிகளில் இப்போதுகூட சேர்க்காமல், அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தையும், கேப்டன் விராட் கோலியையும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், இடதுகை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதையடுத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜயசங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

தற்போது, காயம் காரணாக  விஜய் சங்கரும் தொடரிலிருந்து விலகவே,  மீண்டும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடையே, ரிஷப் பண்டுக்கும் சான்ஸ் கொடுத்தாகிவிட்டது. 

ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒரு சதமும்,  ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளதுடன், 41.66 பேட்டிங் சராசரியை வைத்துள்ள திறமைமிக்க மிடில் -ஆர்டர்  பேட்ஸ்மேனான அம்பதி ராயுடுவுக்கு இப்போதுகூட  வாய்ப்பு வழங்கப்படாதது என்ன விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை" என்று ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close