இந்தியா பேட்டிங்: தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் இன், அவுட்டானது யார்?யார்?

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 04:01 pm
india-won-the-toss-and-chose-the-bat

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள 40-ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோகித், ராகுல், கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், தோனி,தினேஷ் கார்த்திக்., ஹர்திக் பாண்ட்யா, சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி. 

வங்கதேசம்: தமிம் இக்பால், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஸ்தாபீகர் ரஹீம், சர்கார், ஹூசைன், சைய்புதீன், ஷபீர் ரஹ்மான், மோர்டசா (கேப்டன்), ரூபல் ஹூசைன், முஷ்தாபீகர் ரஹ்மான்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close