இந்தியா டீமில சேர்க்கலன்னா என்ன?...நாங்க இருக்கோம்ல... ராயுடுவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாடு!

  கிரிதரன்   | Last Modified : 02 Jul, 2019 08:26 pm
icc-world-cup-2019-snub-ambati-rayudu-gets-permanent-citizenship-offer-from-another-country

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்த அம்பதி ராயுடு, அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும்,  மாற்று வீரர்களுக்கான பட்டியலில் அவர் இடம்பெற்றது அவரது  ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல் அடைய செய்தது.

ஆனாலும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியபோது அவருக்கு பதிலாக, ஆல் -ரவுண்டரான விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

தற்போது அவரும் காயம் காரணமாக போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், மாற்று வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்டுக்கும், மயங்க் அகர்வாலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதே தவிர, ராயுடுவுக்கு தற்போதும் சான்ஸ் தரப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தி, நிச்சயம் உற்சாகத்தை அளித்திருக்கும்.

— Iceland Cricket (@icelandcricket) July 1, 2019

ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் வாரியம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " மயங்க் அகர்வால் கிரிக்கெட்டில் இதுவரை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு, அம்பதி ராயுடு இனியாவது தமது அடையாளங்களில் ஒன்றான 3டி கண்ணாடியை கழற்றிவிட்டு, சாதாரண கண்ணாடியை அணிந்து கொண்டு, ஐஸ்லாந்து நாட்டின் குடியுரிமை ஆவணங்களை  படித்து பார்க்க வேண்டும். ஐஸ்லாந்தின் நிரந்தர குடிமக்களுக்கான உரிமையை பெற்று அவர், எங்கள் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும்" என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close